இயேசு அரசாளுகிறார்
பழயவைகள் ஒழிந்து எல்லாம் புதிதாயின
இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்
சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார்.
இவைகள் எல்லாவற்றிற்குப் பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார். உலகத்தின் ராஜ்யங்கள் கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாகும்; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார்.
இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அவருடைய வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம். அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம்.
நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகும்.
புதிய எருசலேமாகிய கிறிஸ்துவின் சபையினர் இயேசுவோடு புதிய பூமியில் வாசம்பண்ணும்படியாக பரலோகதேவனிடத்திலிருந்து இறங்கி வருவார்கள். இங்கே அவர்களுடைய ஆண்டவரோடு தேவனுடைய குமாரராய் சதாகாலமும் வாசம்பண்ணுவார்கள்.