top of page

சீர் இயேசு நாதனுக்கு 40 ஜெயமங்களங்கள்

Updated: Jul 8, 2023

சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி திரியேக நாதனுக்கு சுபமங்களம்


பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு


ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம் அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம் நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாளனுக்கு ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு


மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம் வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம் கானான் நல் தேயனுக்குக் கன்னி மரிசேயனுக்கு கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு


பத்து லட்சணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம் பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம் சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு


சொல்

பொருள்

English

1

சீர்

பூரணர்

Perfect

2

இயேசு

இரட்சகர்

Saviour

3

நாதன்

ஆண்டவர்

Lord

4

ஆதி

துவக்கம்

Beginning

5

திரியேகன்

மூவொருவர்

Triune

6

பாரேறு

உலகம் போற்றும்

Worshipped by the world

7

நீதன்

பரிசுத்தர்

Holy One

8

பரம

பரலோகத்துக்குரியவர்

Heavenly

9

பொற்பாதன்

விலையேறப்பெற்ற பாதங்களுடையவர்

One with the precious (golden) feet

10

நேரேறு போதன்

உயர்ந்த நீதியை போதித்த குரு

Teacher of excellent morals

11

நித்தியன்

முடிவில்லாதவர்

Eternal

12

சங்கீதன்

போற்றுதற்குரியவர்

Adorable

13

ஆதி சருவேசன்

ஆதிதேவன்

God with no beginnings

14

ஈசன்

இயேசு

Jesus

15

அகிலப் பிரகாசன்

உலகத்துக்கு ஒளியானவர்

Light of the world

16

நேசன்

அன்புக்குரியவர்

Beloved

17

நீதிபரன்

நீதியுள்ளவர்

Righteous One

18

பாலன்

குமாரன்

Son of man

19

நித்திய குணாளன்

என்றும் சற்குணர்

of Excellent character

20

ஓதும் அனுகூலன்

கூப்பிட்டால் உதவிக்கு ஓடிவருபவர்

Help in time of need

21

உயர்

உன்னதமானவர்

Highest

22

மனுவேலன்

நம்மோடிருக்கும் தேவன்

God with us

23

மானாபிமானன்

எல்லா கனத்துக்குமுரியவர்

Worthy of all honour

24

வானன்

பரலோகத்துக்குரியவர்

Heavenly

25

வளர் கலைக் கியானன்

சகல தலந்துகளும் அருள்பவர்

Giver of all talents

26

ஞானன்

ஞானம்

Wisdom

27

கானான் நல் தேயன்

செழிப்பின் தேசத்துக்குரியவர்

Of the land of plenty

28

கன்னி மரிசேயான்

கன்னி மரியாளின் மகன்

Son of virgin Mary

29

கோனார்

மேய்ப்பர்

Shepherd

30

சகாயன்

துணையாளர்

Helper

31

கூறு

புத்திக்கூறுக்கு உரியவர்(விவேகி)

Brilliant

32

பெத்தலேயன்

பெத்லகேமில் பிறந்தவர்

of Bethlehem

33

பத்து லட்சணத்தன்

நிறைவான லட்சணங்கள் உடையவர்

of perfect character

34

சுத்தன்

தூய்மையானவர்

Pure

35

பரம பதத்தன்

பரலோக சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறவர்

Seated on the heavenly throne

36

நித்தன்

என்றென்றும் இருக்கிறவர்

Always existent (I AM)

37

சத்திய விஸ்தாரன்

உண்மையை வெளியரங்கமாக்கியவர்

One who revealed the truth

38

சருவாதிகாரன்

சகல அதிகாரமும் உடையவர்

All powerful / possessing all authority

39

பத்தர் உபகாரன்

தம் பக்தருக்கு உதவிசெய்பவர்

One who succours His disciples

40

பரமகுமாரன்

தேவனுடைய குமாரன்

Son of God

 
 
 

Comments


bottom of page